கொடைக்கானலில் தீத்தடுப்பு, பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை
கொடைக்கானலில் தீத்தடுப்பு மற்றும் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
கொடைக்கானல்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கொடைக்கானல் மலைப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி, கொடைக்கானல் தீயணைப்பு படையினர் சார்பில் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது.
இதற்கு ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். பின்னர் தீயணைப்பு படையினர் பேரிடர் பாதுகாப்பு மற்றும் தீத்தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது, மழைக்காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும், பேரிடர் மீட்பு குழுவினர் வருவதற்கு முன்பாக செய்ய வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்தும், தீவிபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு அணைப்பது, வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு ஆபத்து காலங்களில் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது, தீ விபத்தால் பாதிக்கப்பட்ட நபர்களை எவ்வாறு மீட்க வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு எளிதாக புரியும் வகையில் தீயணைப்பு படைவீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் உபகரணங்கள் காட்சிப்படுத்தி, அதனை செயல்படுத்தும் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story