திருவள்ளூர் அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


திருவள்ளூர் அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Sept 2021 9:51 PM IST (Updated: 21 Sept 2021 9:51 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள சித்துக்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 39). இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நந்தகுமார் இரவில் வெகுநேரம் தொலைபேசியை பயன்படுத்தி வந்தார். இதனால் அவருக்கும் அவரது மனைவி பார்வதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நந்தகுமார் தன்னுடைய மனைவியை விட்டு பிரிந்து அதே பகுதியில் வாடகை வீட்டில் இருந்து வந்தார்.

அங்கும் வந்து பார்வதி தன்னுடைய கணவரிடம் நீண்ட நேரமாக செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக தகராறு செய்தார். இதில் மனவேதனை அடைந்த நந்தகுமார் நேற்று முன்தினம் தன்னுடைய அறைக்கு சென்று அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெள்ளவேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story