புதுச்சேரியில் 6.65 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி


புதுச்சேரியில் 6.65 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி
x
தினத்தந்தி 21 Sept 2021 10:10 PM IST (Updated: 21 Sept 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் 6.65 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி, செப்.22-
புதுச்சேரியில் 6.65  லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
101 பேருக்கு கொரோனா 
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 461 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 101 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது. 
தற்போது ஆஸ்பத்திரிகளில் 142 பேர், வீடுகளில் 780 பேர் என மொத்தம் 922 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 46 பேர் குணமடைந்தனர். உயிரிழப்பு ஏதும் இல்லை. 
தடுப்பூசி 
புதுவையில் தொற்று பரவல் 1.85 சதவீதமாகவும், குணமடைவது 97.81 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் 11 ஆயிரத்து 432 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதாவது முதல் டோசை 3 ஆயிரத்து 477 பேரும், 2வது டோசை 7 ஆயிரத்து 955 பேரும் போட்டுக்கொண்டனர். 
மாநிலத்தில் இதுவரை முதல் தடுப்பூசியை 6 லட்சத்து 65 ஆயிரத்து 528 பேரும், 2வது தடுப்பூசியை 2 லட்சத்து 58 ஆயிரத்து 235 பேரும் போட்டுள்ளனர்.
----

Next Story