மினி மாரத்தான் ஓட்டம்


மினி மாரத்தான் ஓட்டம்
x

உலக அமைதி தினத்தையொட்டி தேனியில் மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.

தேனி:

 உலக அமைதி தினத்தையொட்டி உலக அமைதியை வலியுறுத்தியும், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மினி மாரத்தான் ஓட்டம் தேனியில் நடந்தது. 

தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையம் முன்பு இதற்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் கொடியசைத்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையம் முன்பு தொடங்கி, அன்னஞ்சி விலக்கு, அல்லிநகரம், நேரு சிலை சிக்னல், மதுரை சாலை, கலெக்டர் அலுவலகம் வழியாக மீண்டும் கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலைய வளாகத்தில் மாரத்தான் ஓட்டம் நிறைவு அடைந்தது. 

சுமார் 12.5 கிலோமீட்டர் தூரம் இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Next Story