குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Sept 2021 10:22 PM IST (Updated: 21 Sept 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அல்லிநகரம்:

பெரியகுளம் அழகர்சாமிபுரத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன் (வயது 23). இவர், தேனி அருகே மதுராபுரியில் உள்ள டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து மதுபானங்கள் திருடிய வழக்கில் கடந்த மாதம் அல்லிநகரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

பின்னர் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட புவனேஸ்வரன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இதனால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார். 

அதன்பேரில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை மத்திய சிறையில் உள்ள புவனேஸ்வரன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை காவலில் வைக்கப்பட்டார்.

Next Story