விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்,
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலக வளாகத்தில் நேற்று அரசு போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தேனாம்பேட்டை கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர்கள் அன்பழகன், பாஸ்கரன், நந்தகோபால் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தேனாம்பேட்டை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு கடன் பாக்கி வைத்துள்ள ரூ.35 கோடியை செலுத்தாத விழுப்புரம் கோட்ட நிர்வாகத்தை கண்டித்தும், அந்த தொகையை உடனடியாக செலுத்த வலியுறுத்தியும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி, மண்டல தலைவர்கள் கடலூர் ஜான்விக்டர், திருவண்ணாமலை சேகர், மண்டல பொதுச்செயலாளர்கள் வேலூர் ரவிச்சந்திரன், விழுப்புரம் ரகோத்தமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இவர்களிடம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் ஜோசப்டயஸ் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தொழிலாளர்களிடம் பிடித்த நிலுவையில் உள்ள தொகையை விரைவில் தேனாம்பேட்டை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கத்தினர் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story