புரட்டாசி மாதம் எதிரொலி: அத்தியூர் வார சந்தையில் ஆடுகள் விலை வீழ்ச்சி
விவசாயிகள் கவலை
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் அருகே அத்தியூர் கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று ஆடு சந்தை நடைபெறும். இந்த வாரச்சந்தைக்கு ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், சங்கராபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கால்நடைகளை வளர்ப்பவர்கள். விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதனை உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த வியாபாரிகள், இறைச்சி வியாபாரிகள் நேரில் வந்து ஆடுகளை விலைக்கு வாங்கி செல்வார்கள்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு ஏராளமானோர் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அதனை வாங்க வந்த வியாபாரிகள், இடைத்தரகர்கள் புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதை காரணம் காட்டி ஆடுகளின் விலையை குறைவாக நிர்ணயம் செய்தனர். இதனால் பெரும்பாலானோர் ஆடுகளை விற்காமல் திருப்பி கொண்டு சென்றனர். பண கஷ்டத்தில் உள்ளவர்கள் தாங்கள் கொண்டு வந்த ஆடுகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து விட்டு, கவலையுடன் சென்றனர்.
இதுகுறித்து கால்நடை வளர்த்து வரும் விவசாயி ஒருவர் கூறுகையில், புரட்டாசி மாதம் இந்துக்கள் பெரும்பாலோனர் அசைவம் சாப்பிட மாட்டார்கள். ஆகவே வியாபாரிகள் ஆடுகளின் விலையை குறைத்து வாங்கி சென்றனர். இருப்பினும் நேற்று ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்தது என்றார்.
Related Tags :
Next Story