முன்னாள் கவுன்சிலர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோர்ட்டில் ஆஜர்
கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோர்ட்டில் ஆஜர்
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகியும், முன்னாள் கவுன்சிலருமான வசீம் அக்ரம் கடந்த 10-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் கடந்த 15-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் காளிமுத்து வேல் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். மேலும் டீல் இம்தியாசை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக் போலீஸ் சார்பில் மனு அளித்தனர். மேலும் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர் இங்கு ஆஜர்படுத்தபட்டதால் அசம்பாவிதம் எதும் ஏற்பாடமல் தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில், கோர்ட்டு வளாகம் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story