திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 156 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. திருவண்ணாமலை அருகே குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 156 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. திருவண்ணாமலை அருகே குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பலத்த மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.
மேலும் நொச்சிமலை பகுதியில் உள்ள ஏரியில் இருந்து மழைநீர் வெளியே செல்ல வழியில்லாததால் அதன் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இதையடுத்து நேற்று பகலில் நொச்சிமலை குடியிருப்பு பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.
மழைநீர் செல்லும் கால்வாய்யை பொக்லைன் எந்திரம் மூலம் சீர் செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் தேங்கி இருந்த தண்ணீர் படி, படியாக குறைய தொடங்கியது.
அதேபோல் திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கோடிதிப்பை பகுதியில் 50&க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் பெய்த மழையால் அப்பகுதியில் உள்ள தெருக்களில் மழைநீர் தேங்கியது. சில குடியிருப்புகளிலும் மழைநீர் புகுந்தது.
கலசபாக்கத்தில்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையில், அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 159 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கீழ்பென்னாத்தூர்- 96.8, ஜமுனாமரத்தூர் - 69, திருவண்ணாமலை -54, போளூர் & 12.6, தண்டராம்பட்டு- 8, சேத்துப்பட்டு-2.8, ஆரணி - 1 ஆகும்.
மேலும் குப்பநத்தம் அணைக்கு விநாடிக்கு 70 கன அடி நீர் வரத்தும், மிருகண்டாநதி அணைக்கு விநாடிக்கு 80 கன அடி நீர் வரத்தும், செண்பகதோப்பு அணைக்கு விநாடிக்கு 32 கன அடி நீர்வரத்தும் ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story