அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி
4 நாட்களுக்கு பிறகு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 17-ந்தேதி முதல் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து வழக்கம் போல் 3 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் கோவிலில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது.
இதனால் பவுர்ணமியன்று கோவிலில் சாமி தா¤சனம் செய்ய வந்த பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் பக்தர்கள் ராஜகோபுரத்தின் முன்பு நின்று விளக்கேற்றி சாமியை தரிசனம் செய்தனர்.
புரட்டாசி பவுர்ணமி நேற்று முன்தினம் அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி நேற்று அதிகாலை 5.51 மணிக்கு நிறைவடைந்தது. 4 நாட்களுக்கு பிறகு நேற்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
அதனால் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டதில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story