தென்னை உழவர் உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக பெண் அதிகாரியிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி


தென்னை உழவர் உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக பெண் அதிகாரியிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி
x
தினத்தந்தி 21 Sept 2021 11:55 PM IST (Updated: 21 Sept 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

தலைமை நிர்வாக பெண் அதிகாரியிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி செய்தனர்.

அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே பெரியாளூரை சேர்ந்தவர் சுகாசினி (வயது 28). இவர், ராஜேந்திரபுரத்தில் உள்ள தென்னை உழவர் உற்பத்தி நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் கூத்தாடிவயலை சேர்ந்த ஆனந்த் என்று கூறி வாலிபர் ஒருவர் தென்னை உழவர் உற்பத்தி அலுவலகத்திற்கு சென்று சுகாசினியிடம் தென்னங்கன்று விலை என்ன என்று கேட்டுள்ளார். அப்போது குடிக்க அவர் தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் எடுக்க சென்ற சுகாசினியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க வாலிபர் முயற்சி செய்தார். இதையடுத்து சுகாசினி சத்தம் போட்டார். சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி அந்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story