லாரி மோதி பிளம்பர் பலி


லாரி மோதி பிளம்பர் பலி
x
தினத்தந்தி 22 Sept 2021 12:20 AM IST (Updated: 22 Sept 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

லாரி மோதி பிளம்பர் பலியானார்.

அரிமளம்:
அறந்தாங்கி அருகே உள்ள களப்பகாடு கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 47). பிளம்பரான இவர், சம்பவத்தன்று களப்பகாடு கிராமத்தில் இருந்து திருமயத்திற்கு வந்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். வையாபுரிபட்டி பாலம் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் படுகாயமடைந்த காளிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் அய்யப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story