வழிப்பறி, திருட்டு வழக்குகளில் 17 பேர் கைது
திருச்சி பகுதியில் ஒரேநாளில் வழிப்பறி, திருட்டு வழக்குகளில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி, செப்.22&
திருச்சி பகுதியில் ஒரேநாளில் வழிப்பறி, திருட்டு வழக்குகளில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழிப்பறி, ஜேப்படி
திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக ரவுடிகள் மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் வழிப்பறி மற்றும் ஜேப்படி திருடர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, ஏர்போர்ட் அந்தோணியார் கோவில் வீதியை சேர்ந்த நாகப்பாவிடம் (39) கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பறிக்க முயன்ற உடையான்பட்டியை சேர்ந்த சரத் (31) என்பவரை ஏர்போர்ட போலீசாரும், திருவானைக்காவல் டாஸ்மாக் அருகே கார்த்திக் (24) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை ஸ்ரீரங்கம் போலீசாரும் கைது செய்தனர்.
அண்ணன், தம்பி கைது
இதுபோல் திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (36) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக அதே பகுதியை சேர்ந்த அண்ணன், தம்பிகளாக பிரபாகரன் (25) , கங்காதரன் (21) ஆகியோரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர். மேலும் தீரன்நகரை சேர்ந்த ஆசைத்தம்பி (41) திருச்சி வ.உ.சி. சிலை அருகே பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, அவரது சட்டைப்பையில் இருந்து ரூ.200&ஐ ஜேப்படி செய்ய முயன்ற கும்பகோணத்தை சேர்ந்த பாரதியை (38) , அவர் கையும் களவுமாக பிடித்து செசன்ஸ் கோர்ட்டு போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதியை கைது செய்தனர்.
செல்போன் திருட்டு
கே.கே.நகர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் கே.சாத்தனூரை சேர்ந்த ராஜேசின் (29) செல்போனை ஜேப்படி செய்ய முயன்ற அதே பகுதியை சேர்ந்த ராகேஷ் (40) , ஏ£¢போர்ட் பகுதியை சேர்ந்த லியோ (40) ஆகியோரை கே.கே.நகர் போலீசாரும், உறையூர் கீதாநகர் பஸ்நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த இப்ராகிமிடம் (25) கத்தியை காட்டி மிரட்டி ரூ.300&ஐ வழிப்பறி செய்த ஸ்ரீனிவாசாநகரை சேர்ந்த நிர்மல்பாரதியை (29) உறையூர் போலீசாரும் கைது செய்தனர்.
பொன்மலைப்பட்டி பஸ்நிறுத்தத்தில் மணிகண்டன் (40) என்பவரிடம் ரூ.200 ஜேப்படி செய்ய முயன்ற பாலக்கரையை சேர்ந்த நாவலடியானை (44) பொன்மலைப்பட்டி போலீசாரும், ஏர்போர்ட் பஸ்நிறுத்தத்தில் பாலக்கரையை சேர்ந்த குணசேகரனிடம் (33) ரூ.200 மற்றும் செல்போனை ஜேப்படி செய்ய முயன்ற சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த பாலமுருகன் (32) , கலியமூர்த்தி (20) ஆகியோரை ஏர்போர்ட் போலீசாரும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சோமரசம்பேட்டை
சோமரசம்பேட்டை மாரியம்மன் கோவில் தோப்பு பகுதியை சேர்ந்த முருகானந்தம் (27) என்பவரிடம் தாயனூர் மேலக்காடு பகுதியை சேர்ந்த தீச் செல்வம் என்ற சுப்பிரமணி (46), எட்டரை கடைவீதி பகுதியை சேர்ந்த ஜாக் என்ற ஜெகதீசன் (26) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.450 பறித்து சென்று விட்டனர். அவர்களை சோமரசம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
சோமரசம்பேட்டை கீழ வயலூர் பகுதியை சேர்ந்தவர் உஸ்மான் அலி (37). இவர் அந்த பகுதியில் கறிகடை வைத்துள்ளார். நேற்று காலை அல்லித்துறை பாலம் அருகே சென்று கொண்டிருந்த உஸ்மான் அலியை தாயனூர் மேல தெருவை சேர்ந்த தனபால் (25), போசம்பட்டி மேலக்காடு பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் (27), பள்ளக்காட்டை சேர்ந்த ரஞ்சித் என்ற பரிமணம் (23) ஆகியோர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.500&ஐ பறித்து சென்றனராம். இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

Related Tags :
Next Story