நாய் கடித்து மான் சாவு


நாய் கடித்து மான் சாவு
x
தினத்தந்தி 22 Sept 2021 12:57 AM IST (Updated: 22 Sept 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை அருகே நாய் கடித்ததில் மான் பரிதாபமாக இறந்தது.

தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை வைப்பாற்றின் கரைப்பகுதியில் உள்ள காட்டு பகுதியில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. இரையை தேடி அடிக்கடி வெம்பக்கோட்டை ஊருக்குள் மான்கள் வருவது வழக்கம். இந்தநிலையில் இரையை தேடி வந்த மான் ஒன்றை, தெரு நாய்கள் விரட்டி கடித்தன. காயங்களுடன் உயிர் தப்பிய அந்த மான் முட்புதருக்கு சென்று பதுக்கி இருந்தது. இதையடுத்து அந்த மான் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் இறந்த மானை மீட்டு பிரேத பரிசோதனை செய்து அருகிலேயே புதைத்தனர்.

Next Story