ஸ்ரீரங்கத்தில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி


ஸ்ரீரங்கத்தில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி
x
தினத்தந்தி 22 Sept 2021 1:13 AM IST (Updated: 22 Sept 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கத்தில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி

ஸ்ரீரங்கம், செப்.22&
ஸ்ரீரங்கத்தில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு திருச்சி மாவட்டம் எட்டரை, கோப்பு, குழுமணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் மற்றும் ஒசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் தினந்தோறும் 50 டன் பூக்கள் விற்பனைக்காக வருகின்றன. ஆவணி மாதத்தில் 7 முகூர்த்த தினங்களும், விநாயகர் சதுர்த்தி போன்ற திருவிழாக்கள் வந்ததால் பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்தது. மல்லிகை பூ ரூ1,500 வரை விற்கப்பட்டது. தற்போது புராட்சி மாதம் பிறந்ததால் முகூர்த்த தினங்கள் இல்லாததால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டில் நேற்று மல்லிகைபூ கிலோ ரூ.120, கனகாம்பரம் ரூ.80, முல்லைபூ ரூ.100, ஜாதிபூ ரூ.120, பன்னீர்ரோஜா ரூ.20, சம்பங்கி ரூ.20, செவ்வந்தி ரூ.20 முதல் 30, தாமரை 1ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இதுகுறித்து பூவியாபாரி ரெங்கராஜ் கூறுகையில், :பூ விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி தொடங்கும் வரை பூ விலை குறைவாகவே இருக்கும். அதன் பின்னர் ஆயுதபூஜை, தீபாவளி, ஐப்பசி முகூர்த்த தினங்களில் பூக்களின் விலை உயரும் என்றார்.

Next Story