திருத்தங்கல் புதிய பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்


திருத்தங்கல் புதிய பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
x
தினத்தந்தி 22 Sept 2021 1:31 AM IST (Updated: 22 Sept 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

திருத்தங்கல் புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி, 
திருத்தங்கல் புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 புதிய பஸ் நிலையம் 
சிவகாசி-விருதுநகர் மெயின் ரோட்டில் உள்ள திருத்தங்கல் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பல லட்சம் ரூபாய் செலவில் திருத்தங்கல் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. 
பஸ் நிலையம் தொடக்கவிழா நடைபெற்ற பின்னர் சில நாட்கள் மட்டும் அங்கு பஸ்கள் சென்று வந்தது. பின்னர் புதிய பஸ் நிலையத்தை அரசு மற்றும் தனியார் பஸ்கள் புறக்கணித்தது. இதனால் பஸ் நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருத்தங்கல் நகராட்சிக்கு புதிதாக வந்த அதிகாரிகள் பஸ் நிலையத்தை செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். அதன் விளைவாக பஸ் நிலையத்தில் காலியாக இருந்த கடைகளை வியாபாரிகளுக்கு ஏலம் கொடுக்கப்பட்டது. 
பயன்பாட்டிற்கு வருமா? 
இதன் மூலம் நகராட்சிக்கு ஒருகுறிப்பிட்ட தொகை வருமானமாக கிடைக்க உள்ளது. இந்தநிலையிலும் புதிய பஸ் நிலையத்துக்கு பஸ்கள் செல்வதில்லை. பொதுமக்கள் வராததால் கடைகள் திறக்கப்படாமல் இருக்கிறது. 
அடுத்து வரும் காலங்களிலும் இதே நிலை நீடித்தால் கடைகளை ஏலம் எடுத்த வியாபாரிகள் கடைகளை திருப்பி நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டிய ஒரு நிலை ஏற்படலாம். அதன் பின்னர் புதிய பஸ் நிலையம் மீண்டும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் நிலை ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து திருத்தங்கல் புதிய பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story