நெல்லை மாவட்ட பஞ்சாயத்து, ஒன்றிய வார்டு தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து, ஒன்றிய வார்டு தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
நெல்லை:
பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஆகியோர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து, ஒன்றிய வார்டு தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 12 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் உள்ளன. இதில் நெல்லை கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 3-வது வார்டு நொச்சிகுளம் கனகராஜ், 5-வது வார்டு சிவந்திபுரம் கஸ்பா அருண் தபசு, 6-வது வார்டு சேரன்மாதேவி கரிசல்பட்டி ஓடைக்கரை சாலமோன் டேவிட், 7-வது வார்டு இறைப்புவாரி புதுக்குளம் வக்கீல் கிருஷ்ணவேணி, 8-வது வார்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு, 9-வது வார்டு கூடங்குளம் ஜான்ஸ் ரூபா, 10-வது வார்டு காவல்கிணறு லிங்க சாந்தி, 11-வது வார்டு ஆவரைகுளம் பாஸ்கர், 12-வது வார்டு அப்புவிளை வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
ஒன்றிய வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள்:-
வள்ளியூர் ஒன்றியத்தில் 1-வது வார்டு பானுமதி, 2-காங்கிரஸ், 3-பொன்குமார், 4-டெல்சி ஒபிலியா, 5-தாய் செல்வி, 6-அலெக்ஸ் பால்கோசிஜின், 7-காங்கிரஸ், 8-திவாகரன், 9-சேவியர், 10-ஜெயா, 11-மகாலட்சுமி, 12-மல்லிகா அருள், 13-பாண்டிதுரை, 14-அன்னசெல்வம், 15-சித்ரா, 16-அனிதா, 17-அஜந்தா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
ராதாபுரம் ஒன்றியம் 1-வது வார்டு அமிர்த மெல்லோ, 2-விடுதலை சிறுத்தைகள் கட்சி, 3-காங்கிரஸ், 4-ஜெசி, 5-அனிதா ஸ்டெல்லா, 6-இளையபெருமாள், 7-இசக்கிபாபு, 8-பரிமளம், 9-முருகன், 10-காங்கிரஸ், 11-நடராஜன், 12-சிவசுப்பிரமணியன், 13-பின்னர் அறிவிக்கப்படும், 14-ஜேசுராஜ், 15-அன்றனி அல்வின், 16-ஜெயமேரி, 17-வி.எஸ்.ஆர்.ஜெ.சவுமியா, 18-அருணா டென்சிங்.
களக்காடு ஒன்றியத்தில் 1-வது வார்டு ஜார்ஜ் கோசல், 2-காங்கிரஸ், 3-விசுவாசம், 4-அருள், 5-இந்திய கம்யூனிஸ்டு, 6-டாக்டர் கார்த்திக் குமார், 7-இந்திரா கோசல், 8-விஜயலட்சுமி, 9-சங்கரம்மாள்.
நாங்குநேரி ஒன்றியத்தில் 1-வது வார்டு இசக்கி பாண்டி, 2-பிரவின் பாரத், 3-சுப்பிரமணியன், 4-மீனா, 5-காங்கிரஸ், 6-ம.தி.மு.க., 7-ஆரோக்கிய எட்வின், 8-பன்னீர் ஆரோக்கியமேரி, 9-சவும்யா, 10-சுப்புலட்சுமி, 11-காங்கிரஸ், 12-ஜெபக்கனி, 13-செல்வ பிரேமா, 14-கமலி, 15-அகஸ்டின் கீதாராஜ், 16-பிரேமா என்ற எபினேசர்.
சேரன்மாதேவி ஒன்றியத்தில் 1-வது வார்டு அனந்தலெட்சுமி, 2-ஜெயசெல்வம், 3-பூங்கோதை, 4-காங்கிரஸ், 5-கனகமணி என்ற கஸ்தூரிபாய்.
அம்பை ஒன்றியத்தில் 1-வது வார்டு காங்கிரஸ், 2-ஆகாஷ், 3-கஸ்தூரி, 4-உலகு என்ற சுடலைமுத்து, 5&ஞானக்கனி, 6&சரசுவதி, 7&ராமலட்சுமி, 8-இசக்கியம்மாள், 9-சிவன்பாண்டியன் என்ற பரணி சேகர்.
பாளையங்கோட்டை ஒன்றியத்தில் 1-வது வார்டு மூக்கையா, 2-பேச்சியம்மாள், 3-குமரேசன், 4-திருப்பதி, 5-தமிழரசி, 6-கே.எஸ்.தங்கபாண்டியன், 7-பகவதி, 8-ராஜாராம், 9-சரசுவதி, 10-ராமகிருஷ்ணன், 11-நம்பிராஜன், 12-முரளிதரன், 13-ராமலட்சுமி, 14-பூலம்மாள் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
பின்னர் இது தொடர்பாக ஆவுடையப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்ட பஞ்சாயத்தில் உள்ள 12 வார்டுகளில் 9 வார்டுகள் நெல்லை கிழக்கு மாவட்ட பகுதியில் வருகிறது. இதில் 8 இடங்களில் தி.மு.க. போட்டியிடுகிறது. 1 இடம் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோன்று அம்பை, சேரன்மாதேவி, களக்காடு, நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், பாளையங்கோட்டை ஆகிய 7 ஒன்றியங்களில் 89 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியிடம் உள்ளது. இதில் 76 இடங்களில் தி.மு.க. போட்டியிடுகிறது. காங்கிரஸ் 9 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கூட்டணி கட்சிகளுக்கு தலா 1 இடம் வீதம் என கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 13 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அம்பை, நெல்லை சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ராதாபுரம் தொகுதிக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத¢துறை அமைச்சர் கீதாஜீவன், நாங்குநேரி தொகுதிக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தி.மு.க. ஆட்சி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கணேஷ்குமார் ஆதித்தன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story