கேட்பாரற்று கிடக்கும் 22 இருசக்கர வாகனங்கள்


கேட்பாரற்று கிடக்கும் 22 இருசக்கர வாகனங்கள்
x
தினத்தந்தி 21 Sep 2021 8:35 PM GMT (Updated: 21 Sep 2021 8:35 PM GMT)

சிதம்பரத்தில் பஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடக்கும் 22 இருசக்கர வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க போலீசில் புகார் செய்யப்பட்டது.

சிதம்பரம், 

சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இதனை அம்மாபேட்டையை சேர்ந்த ரமேஷ்(வயது 42) என்பவர் நடத்தி வருகிறார். சிதம்பரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் இருசக்கர வாகனங்களில் பஸ் நிலையத்திற்கு வந்து, அதனை வாகன நிறுத்தும் இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தி விட்டு பஸ்களில் வெளியூர் சென்று வருவது வழக்கம். இதற்காக வாகன உரிமையாளரிடம் குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது. 
இவ்வாறாக 22 வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றவர்கள், அதனை மீண்டும் எடுத்துச்செல்லவில்லை. கடந்த ஓராண்டாக 22 இருசக்கர வாகனங்கள் கேட்பாரற்று வாகன நிறுத்துமிடத்தில் கிடக்கிறது. அதனை உரிமை கோரவும் யாரும் வரவில்லை. 
இது குறித்து ரமேஷ், சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அந்த புகாரில், ஓராண்டாக கேட்பாரற்று கிடக்கும் 22 இருசக்கர வாகனங்களை உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டு என்று கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 22 இருசக்கர வாகன எண்ணையும் சேகரித்தனர். மேலும் அந்த வாகனங்கள் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Next Story