தங்கும் விடுதியில் ரகசிய அறை அமைத்து விபசாரம்


தங்கும் விடுதியில் ரகசிய அறை அமைத்து விபசாரம்
x
தினத்தந்தி 22 Sept 2021 2:57 AM IST (Updated: 22 Sept 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

ஆணுறைகளை சாலையில் வீசிய வழக்கில் தங்கும் விடுதியில் ரகசிய அறை அமைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துமகூரு: ஆணுறைகளை சாலையில் வீசிய வழக்கில் தங்கும் விடுதியில் ரகசிய அறை அமைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாலையில் கிடந்த ஆணுறைகள்

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கேத்தசந்திரா மேம்பால பகுதியில் சென்னை-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு, பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை மர்மநபர்கள் வீசிச் சென்றிருந்தனர். இதுகுறித்து துமகூரு போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். 

விசாரணையில், துமகூரு டவுன் கேத்சந்திரா பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் விபசாரம் நடத்தி வருவதும், அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய ஆணுறைகளை குவித்து வைத்து, அதை சாலையோரம் வீசிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து தங்கும் விடுதியில் விபசாரம் நடத்துபவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கினர். 

7 பேர் கைது

இந்த நிலையில் குறிப்பிட்ட தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கும் விடுதியில் ரகசிய சுரங்க அறை அமைத்து விபசாரம் நடத்தியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக 2 வாலிபர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் சோதனையின் போது விபசாரத்தில் ஈடுபட்ட பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் இந்த கும்பல் தான் ஆணுறைகளை வீசிச் சென்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக துமகூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான 7 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story