பெங்களூரு வன்முறை வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்.டி.பி.ஐ. கட்சி பிரமுகர் கைது


பெங்களூரு வன்முறை வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்.டி.பி.ஐ. கட்சி பிரமுகர் கைது
x
தினத்தந்தி 22 Sept 2021 3:04 AM IST (Updated: 22 Sept 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு வன்முறை வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் உறுப்பினரை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.

பெங்களூரு: பெங்களூரு வன்முறை வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் உறுப்பினரை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.

எம்.எல்.ஏ. வீட்டுக்கு தீ வைப்பு

பெங்களூரு கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவம் குறித்து முதலில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் 250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கைதானவர்களில் சிலருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. வன்முறை சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ்.டி.பி.ஐ. பிரமுகர் கைது

இந்த நிலையில் பெங்களூரு வன்முறை சம்பவம் தொடர்பாக 109 பேர் மீது என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்று உள்ள சிலர் தலைமறைவாக உள்ளனர்.

அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு வன்முறை வழக்கில் தலைமறைவாக இருந்த வந்த ஒருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். விசாரணையில் அவர் பழைய பெங்களூரு லே-அவுட்டை சேர்ந்த தப்ரேஸ் (வயது 35) என்பதும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சகாயபுரா வார்டு உறுப்பினர் என்பதும் தெரியவந்தது. கைதான தப்ரேசிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story