மாவட்ட செய்திகள்

மாயமான பெண் வனப்பகுதியில் பிணமாக கிடந்தார் + "||" + woman lay dead in the woods

மாயமான பெண் வனப்பகுதியில் பிணமாக கிடந்தார்

மாயமான பெண் வனப்பகுதியில் பிணமாக கிடந்தார்
மாயமான பெண் வனப்பகுதியில் பிணமாக கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேப்பந்தட்டை:

மாயம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அ.மேட்டூர் காந்தி நகரை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மனைவி புஷ்பா (வயது 47). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவர்கள் டெல்லியில் வசித்து வருகின்றனர். விஜயன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்நிலையில் புஷ்பா, தனது தாய் பெருமாயியுடன் வசித்து வந்தார். கடந்த 7&ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற புஷ்பா பின்னர் வீடு திரும்பவில்லை. இதனைத்தொடர்ந்து பெருமாயி அரும்பாவூர் போலீசில் தனது மகளை காணவில்லை என்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கொலையா?
இந்நிலையில் நேற்று அன்னமங்கலம் வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெண் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் இறந்து கிடந்தவர் புஷ்பாவாக இருக்கலாம் என்று சந்தேகமடைந்த போலீசார், அந்த பெண் பிணத்தை பெருமாயியிடம் காண்பித்தனர். இதையடுத்து பிணமாக கிடந்தது புஷ்பாதான் என்பதை உறுதி செய்த போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் புஷ்பாவின் தலை நசுங்கிய நிலையில் இருந்ததால், அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர். மேலும் அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து, அவரிடம் கடைசியாக பேசிய நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. காரைக்குடியில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் கொலை
காரைக்குடியில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இளம்பெண் உள்பட 5 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
2. சின்னசேலத்தில் விவசாயி கத்தியால் குத்திக்கொலை
சின்னசேலத்தில் விவசாயி கத்தியால் குத்திக்கொலை
3. தென்காசியில் கொலை செய்யப்பட்டவர் மதுரை நிதி நிறுவன அதிபரா?போலீஸ் விசாரணை
மதுரையில் போலீஸ் அலுவலகத்திற்கு நிபந்தனை கையெழுத்து போட சென்ற நிதிநிறுவன அதிபர் திடீரென மாயமானார். இதற்கிடையே தென்காசியில் கொலை செய்யப்பட்டவர் மதுரை நிதி நிறுவன அதிபரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. குழாயால் அடித்து மாமனார் கொலை
குழாயால் அடித்து மாமனாரை கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.
5. குடும்ப தகராறில் தந்தை கொலை; மகன் கைது
குடும்ப தகராறில் தந்தையை கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.