மாவட்ட செய்திகள்

மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection in 6 more people

மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று
மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 858 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 548பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றுக்கு இதுவரை 234 பேர் பலியாகி உள்ளனர். தற்போது கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தற்போது மொத்தம் 76 பேர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ளனர். இவர்களில் 48 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 28 பேர் திருச்சி, தஞ்சை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் சுமார் 3 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மேலும் 1,152- பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,152- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு
மராட்டியத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
3. புதிதாக 6 பேருக்கு கொரோனா
அரியலூர்-பெரம்பலூரில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. புதிதாக 6 பேருக்கு கொரோனா
அரியலூர்-பெரம்பலூரில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. கொரோனாவுக்கு மூதாட்டி பலி
கொரோனாவுக்கு மூதாட்டி உயிரிழந்தார்.