கொட்டகைகள் இடிப்பு; 5 பேர் மீது வழக்கு
கொட்டகைகள் இடிக்கப்பட்டது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த ஆதிச்சனூர் கிராமத்தை சேர்ந்த சில நபர்களிடம் இருந்து 3 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறையினர் கையகப்படுத்தினர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதிச்சனூர் காலனி தெருவை சேர்ந்த குணசேகரனின் மனைவி மகேஸ்வரி, மாரிமுத்துவின் மனைவி பச்சையம்மாள், வடிவேலின் மனைவி விமலா, கணேசனின் மகன் தர்மலிங்கம் ஆகியோருக்கு அந்த நிலம் அளவீடு செய்து கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் மகேஸ்வரி, பச்சையம்மாள், விமலா, தர்மலிங்கம் ஆகியோர் ஆஸ்பெட்டாஸ் ஷீட் மேற்கூரையுடன் கொட்டகை அமைத்தனர். இந்நிலையில் ஆதிச்சனூர் கிராமத்தை சேர்ந்த ராசுவின் மகன் இளங்கோவன், அப்பாதுரையின் மகன் ஆறுமுகம், பெரியசாமியின் மகன் திருஞானம், லிங்கநாதனின் மகன் கார்த்திக், சுந்தரேசபுரத்தை சேர்ந்த சிங்காரத்தின் மகன் ரெங்கநாதன் ஆகியோர் சேர்ந்து கடந்த 19-ந் தேதி இரவு அந்த கொட்டகைகளை இடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து கொட்டகைகளை இடித்த 5 பேரையும் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story