பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபர்


பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபர்
x
தினத்தந்தி 22 Sept 2021 3:10 AM IST (Updated: 22 Sept 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

மகளை திருமணம் செய்துகொடுக்க மறுத்ததால் பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு: மகளை திருமணம் செய்துகொடுக்க மறுத்ததால் பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்

பெங்களூரு நகரில் 17 வயது மைனர் பெண் வசித்து வருகிறாள். இந்த மைனர் பெண் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அந்த மைனர் பெண்ணுக்கும், ஒரு வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் உண்டானது. இதனால் அவர்கள் 2 பேரும் இன்ஸ்டாகிராம் மூலம் குறுந்தகவல் அனுப்பி வந்தனர். இதனால் வாலிபருக்கு, மைனர் பெண் தோழியானார். இந்த நிலையில் மைனர் பெண்ணின் தாயிடமும் அந்த வாலிபர் பேசி வந்து உள்ளார். 

மேலும் மைனர் பெண்ணும், அவரது தாயும், அந்த வாலிபர் கேட்டு கொண்டதன்பேரில் தங்களது புகைப்படங்களை அனுப்பி வைத்து உள்ளனர். இந்த நிலையில் மைனர் பெண்ணின் தாயிடம், உங்களது மகளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று வாலிபர் கேட்டு உள்ளார். ஆனால் அதற்கு மைனர் பெண்ணின் தாய் மறுத்து விட்டதாக தெரிகிறது.

ஆபாசமாக சித்தரித்து...

இதனால் மைனர் பெண், அவரது தாயின் புகைப்படங்களை அந்த வாலிபர் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த மைனர் பெண்ணின் தாய், வாலிபர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

அப்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டது கலபுரகியை சேர்ந்த 25 வயது வாலிபர் என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் கலபுரகிக்கு சென்று அந்த வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story