வேன் கண்ணாடி உடைப்பு; 2 பேர் கைது


வேன் கண்ணாடி உடைப்பு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Sept 2021 3:58 AM IST (Updated: 22 Sept 2021 3:58 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் வேன் கண்ணாடியை உடைத்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
பாளையங்கோட்டை மணப்படைவீடு பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 53). இவருடைய மகன் பாலு. இவருக்கும், கீழநத்தம் மேலூரை சேர்ந்த மூர்த்திக்கும் (30) ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மூர்த்தி, கீழ நத்தத்தைச் சேர்ந்த நாராயணன் (27) உள்ளிட்ட சிலர் இருதயராஜின் வீட்டிற்கு சென்று அவருக்கு சொந்தமான வேன் கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை இருதயராஜ் தட்டிக் கேட்டுள்ளார்.

உடனே மூர்த்தி, இருதயராஜை அவதூறாக பேசி, அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அனைவரும் சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தி, நாராயணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.



Next Story