வெவ்வேறு சம்பவங்களில் பெயிண்டர் உள்பட 3 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் பெயிண்டர் உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 22 Sept 2021 11:10 AM IST (Updated: 22 Sept 2021 11:10 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் பெயிண்டர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஓசூர்:
ஓசூர் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் பெயிண்டர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பெயிண்டர்
ஓசூர் நியூ ஏ.எஸ்.டி. அட்கோவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 26), பெயிண்டர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அந்த பழக்கத்தை விட்டு விடுமாறு பெற்றோர் அவரிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் கே.சி.சி. நகரை சேர்ந்தவர் சசிகுமார் (49). வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இது குறித்து அவரது மனைவி கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த சசிக்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொழிலாளி தற்கொலை
பாரூர் அருகே உள்ள செல்லகூடப்பட்டியை சேர்ந்தவர் கவியரசு (20), கூலித் தொழிலாளி. இவர் தனது தந்தையிடம் மோட்டார்சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டார். இதையடுத்து அவரது தந்தை கடன் பெற்று மகனுக்கு மோட்டார்சைக்கிள் வாங்கி கொடுத்தார். இந்த நிலையில் கவியரசு கடந்த 4 மாதங்களாக கடன் தவணை தொகையை செலுத்தவில்லை.
இது குறித்து அவரது பெற்றோர் கேட்டனர். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் மனமுடைந்த கவியரசு விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கவியரசு இறந்தார். இது குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story