பள்ளிப்பட்டு அருகே கிணற்றில் பெண் பிணம்


பள்ளிப்பட்டு அருகே கிணற்றில் பெண் பிணம்
x
தினத்தந்தி 22 Sept 2021 2:11 PM IST (Updated: 22 Sept 2021 2:11 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு அருகே கிணற்றில் பெண் பிணமாக மீட்கப்பட்டார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை எல்லையம்மன் கோவில் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி தலைமையில் போலீசாரும், பள்ளிப்பட்டு தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து சென்றனர். 

கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த அந்த பெண்ணின் உடலை வெளியே எடுத்தனர். விசாரணையில் அந்த பெண் பொதட்டூர்பேட்டை அம்பேத்கர் காலனியை சேர்ந்த வெங்கட அம்மாள் (வயது 48) என்பது தெரியவந்தது. அவர் வயிற்று வலியாலும், வலிப்பு நோயாலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 4 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன அவர் கிணற்றில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து வெங்கட் அம்மாளின் தம்பி ஏழுமலை பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story