உள்ளாட்சி தேர்தலில் உரிய இடம் ஒதுக்காததை கண்டித்து - காங்கிரஸ் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டம்


உள்ளாட்சி தேர்தலில் உரிய இடம் ஒதுக்காததை கண்டித்து - காங்கிரஸ் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Sept 2021 3:21 PM IST (Updated: 22 Sept 2021 3:21 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் உரிய இடம் ஒதுக்காததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கல்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்டது புதுப்பட்டினம் முதல்நிலை ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் போட்டியிடுகின்றனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்றுள்ளது. 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினர் புதுப்பட்டினம், நல்லாத்தூர், கிராமங்களில் இந்த பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளதாக கூட்டணி கட்சியான தி.மு.க.வினரிடம் கேட்டுள்ளனர். இருப்பினும் அந்த கட்சியில் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. 

நல்லாத்தூர் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் நேற்று மாலை 5 மணி மணியளவில் புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் சி.ஆர்.பெருமாள் தலைமை தாங்கினார். நகர தலைவர் நிஜாமுதீன், மாவட்ட நிர்வாகிகள் டி.பி.ரெட்டி கதிர் மோகன்ராஜ் ஒன்றிய செயலாளர் அப்துல் கரீம் மற்றும் நிர்வாகிகள் முகமது யாசர், சாகுல்அமீது, சிங்காரம் மற்றும் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த போராட்டத்தில் புதுப்பட்டினம் உள்பட 3 இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும் கூட்டணி கட்சியான தி.மு.க.வில் சிலர் மறுப்பு தெரிவித்ததால் நல்லாத்தூர் கிராமம் மட்டும் ஒதுக்கியுள்ளது. புதுப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிட இடம் ஒதுக்கி தராதால் கட்சி தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். 

எனவே தி.மு.க.வை சேர்ந்த சம்பந்தப்பட்டவர்களை கண்டிக்கிறோம். எங்கள் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கண்டனக்குரல் எழுப்பினர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story