படிக்காத மக்களுக்கான ‘கற்போம் எழுதுவோம்’ திட்டம்: விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்


படிக்காத மக்களுக்கான ‘கற்போம் எழுதுவோம்’ திட்டம்: விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Sept 2021 4:12 PM IST (Updated: 22 Sept 2021 4:12 PM IST)
t-max-icont-min-icon

படிக்காத மக்களுக்கான ‘கற்போம் எழுதுவோம்’ திட்டம் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சியை கலெக்டர் ஜெ.விஜயா ராணி தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழகத்தில் 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவை கற்றுத்தரும் நோக்கில், தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் ‘கற்போம் எழுதுவோம்’ என்ற புதிய வயது வந்தோர் கல்வித்திட்டம் 2020-21-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

2021-22-ம் ஆண்டில் 20 ஆயிரம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விழிப்புணர்வு பிரசாரக் கலைக்குழு நிகழ்ச்சியை கோட்டூரில் உள்ள நரிக்குறவர் காலனியில் சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயா ராணி நேற்று தொடங்கிவைத்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சா.மார்ஸ், மாவட்டக் கல்வி அதிகாரி சண்முகவேல், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அதிகாரி ஏ.டி.காமராஜர் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story