தூத்துக்குடியில் பெண்ணிடம் செல்போன் பறித்த சிறுவன் கைது


தூத்துக்குடியில் பெண்ணிடம் செல்போன் பறித்த சிறுவன் கைது
x
தினத்தந்தி 22 Sept 2021 4:51 PM IST (Updated: 22 Sept 2021 4:51 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பெண்ணிடம் செல்போன் பறித்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்தவர் கலா (வயது 36). டெய்லர். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 13 வயது நிரம்பிய 2 சிறுவர்கள் திடீரென கலா கையில் வைத்து இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி செல்ல முயன்றனர். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் விரட்டினர். இதில் ஒரு சிறுவன் பிடிபட்டான். அவனை பொதுமக்கள் சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர்.


Next Story