மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்


மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Sept 2021 4:56 PM IST (Updated: 22 Sept 2021 4:56 PM IST)
t-max-icont-min-icon

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்


பல்லடம்
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 கொங்கு மண்டல பகுதிகளில், ஏராளமான விவசாயிகள் சின்னவெங்காயம் பயிரிடுகின்றனர். விதை வெங்காயம், நடவு கூலி, அறுவடை கூலி, உரம், மருந்து என ஒரு ஏக்கர் வெங்காயம் பயிரிட ரூ.80 ஆயிரம் செலவாகிறது.  சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள காரணத்தால், உள்நாட்டில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தை 10 ரூபாய்க்கும், 15 ரூபாய்க்கும் விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 எனவே மத்திய அரசு உடனடியாக சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை நீக்கி, ஏற்றுமதி செய்ய வேண்டும். மேலும், வெங்காயம் விலை குறைவால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, மாநில அரசு, ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற  25ந்தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். பின்னர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும்.
 இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story