3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கீழையூர் ஒன்றியத்தில் 4 இடங்களில் 27-ந்தேதி சாலை மறியல்


3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கீழையூர் ஒன்றியத்தில் 4 இடங்களில் 27-ந்தேதி சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Sept 2021 5:52 PM IST (Updated: 22 Sept 2021 5:52 PM IST)
t-max-icont-min-icon

3 புதிய வேளாண் சட்டங் களை திரும்ப பெறக் கோரி கீழையூர் ஒன்றியத்தில் 4 இடங்களில் 27-ந்தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேளாங்கண்ணி,

வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கான ஆயத்த கூட்டம் கீழையூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் கண்ணையன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மத்திய அரசு, விவசாயிகளுக்கு விரோதமாக நிறைவேற்றியுள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி முதல் தொடர்ந்து 10 மாதங்களாக கடும் மழை, பனிப்பொழிவு, வெயில் என பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இருந்த போதிலும் கூட விவசாயிகளையும் முறையாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாததை கண்டித்தும், தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி 3 வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27- ந்தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும். கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேலப்பிடாகை, திருக்குவளை, திருப்பூண்டி, வேட்டைகாரனிருப்பு ஆகிய 7 இடங்களில் சாலை மறியல் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சீனிவாசன், மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், உள்ளிட்டநிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story