திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு கூடுதலாக 3 மணி நேரம் அனுமதி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு கூடுதலாக 3 மணி நேரம் அனுமதி
x
தினத்தந்தி 22 Sept 2021 6:30 PM IST (Updated: 22 Sept 2021 6:30 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு கூடுதலாக 3 மணி நேரம் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு இன்று(வியாழக்கிழமை) முதல் கூடுதலாக 3 மணி நேரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கான தடை நீடிக்கப்பட்டு உள்ளது.
பக்தர்களுக்கு அனுமதி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும் திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
கூடுதலாக 3 மணிநேரம்...
ஆனால் இன்று (வியாழக்கிழமை) முதல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டவுடன் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். தொடர்ந்து இரவு 8 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று முதல் கூடுதலாக 3 மணிநேரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் தமிழக அரசின் அறிவின்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கான தடை நீடிப்பதாக, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story