கோவில்பட்டியில் வாலிபருக்கு கொலைமிரட்டல் விடுத்த ரவுடி கைது


கோவில்பட்டியில்  வாலிபருக்கு கொலைமிரட்டல் விடுத்த ரவுடி கைது
x
தினத்தந்தி 22 Sept 2021 7:23 PM IST (Updated: 22 Sept 2021 7:23 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் வாலிபருக்கு கொலைமிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்

கோவில்பட்டி:
கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையில் சப்&இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாரதிநகர் பகுதியில் வாலிபரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவரை பிடித்து விசாரித்தனர். அவர், அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் சூர்யா (வயது 21) என்பதும், ஆறுமுகம் மகன் சாந்தகுமார் (20) என்பவரை வழிமறித்து தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில் ஆறுமுகம் மகன் சாந்தகுமார் சிலநாட்களுக்கு முன்பு பாரதிநகர் சுந்தரபாண்டியன் மகன் செழியன் (9) என்ற சிறுவனிடம் செல்போனை பறித்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து சூர்யாவிடம் இருந்து செல்போனை கைப்பற்றி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சூர்யா மீது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை, நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story