குலசேகரன்பட்டினத்தில் உண்ணாவிரத போராட்டம் பா.ஜனதா எம்.எல்.ஏ உள்பட 97 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு


குலசேகரன்பட்டினத்தில் உண்ணாவிரத போராட்டம் பா.ஜனதா எம்.எல்.ஏ உள்பட 97 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 22 Sep 2021 2:00 PM GMT (Updated: 22 Sep 2021 2:00 PM GMT)

குலசேகரன்பட்டினத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ உள்பட 97 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

குலசேகரன்பட்டினம்:
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை இந்தஆண்டு எவ்வித தடையுமின்றி நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ஜனதா தெற்கு மாவட்டசெயலாளர் சிவமுருகஆதித்தன், பா.ஜனதா எம்.எல்.ஏ. காந்தி தலைமையில் 79 ஆண்கள், 18 பெண்கள் உட்பட 97 பேர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீசார் உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்து, மாலையில் விடுதலை செய்தனர். இந்நிலையில் அரசு அனுமதி இன்றியும், தமிழக அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடு விதி முறைகளை மீறியும் உண்ணாவிரதம் இருந்ததாக பா.ஜனதா எம்.எல்.ஏ. காந்தி உள்ளிட்ட 97பேர் மீது குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story