அம்முண்டி ஊராட்சி தலைவர் பதவியைபொதுப்பிரிவினருக்கு மாற்றக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

அம்முண்டி ஊராட்சி தலைவர் பதவியைபொதுப்பிரிவினருக்கு மாற்றக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
x
தினத்தந்தி 22 Sept 2021 7:41 PM IST (Updated: 22 Sept 2021 7:41 PM IST)
t-max-icont-min-icon

திருவலம் அருகே உள்ள அம்முண்டி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்ததை கண்டித்தும், பொதுபிரிவினருக்கு மாற்றக்கோரியும் தேர்தலை புறக்கணித்து வீடுகளில் கறுப்பு கொடி கட்டி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவலம்

ககுப்புக்கொடி ஏற்றி போராட்டம்

வேலூர் மாவட்டம், திருவலம் அருகே உள்ளது அம்முண்டி ஊராட்சி. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் இந்த ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2,045 பேர் வாக்காளர்களாக உள்ள அம்முண்டி ஊராட்சியில், பட்டியலின பெண்கள் 2 பேர் மட்டுமே உள்ளனர்.
 பட்டியலின ஆண் வாக்காளர் ஒருவர் உள்ளார். மீதியுள்ள 2,042 பேர் பொது வாக்காளர்கள். எனவே பெரும்பான்மையானவர்கள் உள்ள அம்முண்டி ஊராட்சியை பொதுப் பிரிவினருக்கு மாற்றி தரக்கோரி பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்ணா உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினார்கள்.

இந்தநிலையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படாததால், நேற்று அம்முண்டியில் இதே கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி, வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் புறக்கணிப்பு

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் அம்முண்டி ஊராட்சி தலைவர் பதவியை பொதுப்பிரிவினருக்கு மாற்றாததால் நாங்கள் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கிறோம். இதற்கு அடையாளமாக வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி உள்ளோம் என்றனர்.

தேர்தலை புறக்கணிக்க போவதாக அம்முண்டியில் பேனரும் வைக்கப்பட்டுள்ளது. அம்முண்டி ஊராட்சியில் தேர்தலை புறக்கணித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்ளியுள்ளது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story