நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி கடத்தல் - போலீஸ் விசாரணை


நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி கடத்தல் - போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 22 Sept 2021 9:09 PM IST (Updated: 22 Sept 2021 9:09 PM IST)
t-max-icont-min-icon

நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி கடத்தி செல்லப்பட்டதாக தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குளச்சல்,

நித்திரவிளை அருகே தூத்தூர் சின்னத்துறையை சேர்ந்த 17 வயது மாணவி, பி. ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை 6 மணியளவில், கோவிலுக்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். பின்னர் அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில் லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் மாணவி பற்றி எந்தவித தகவலும் இல் லை. இதைத்தொடர்ந்து மாணவியின் தாயார் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதில் தனது மகளை யாரோ கடத்தி சென்றுள்ளதாகவும், போலீசார் மீட்டு தருமாறும் கேட்டு கொண்டு உள்ளார். இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மாயமான மாணவியை தேடி வருகிறார்.

Next Story