கொரோனா பாதிப்பு மீண்டும் 100ஐ கடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 100ஐ கடந்தது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 100ஐ கடந்தது.
101 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 1,682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பல மாவட்டங்களில் கணிசமான பாதிப்பு இருந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 100க்கும் கீழ் இருந்த நிலையில் நேற்று 101 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பலி இல்லை
தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 307ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 71 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 420ஆக உள்ளது.
மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 937 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே நேற்று மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த யாரும் பலியாகவில்லை. இதனால் பலி எண்ணிக்கை 950ஆக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு பிறகு ஒரு நாள் தொற்று திருப்பூர் மாவட்டத்தில் 100ஐ கடந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story