கொடைக்கானல் மலைப்பாதையில் 2-வது நாளாக சீரமைப்பு பணி
ராட்சத மரம் விழுந்ததால் கொடைக்கானல் மலைப்பாதையில் 2-வது நாளாக சீரமைப்பு பணி நடந்தது
தேவதானப்பட்டி:
வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைப்பாதையில், தேவதானப்பட்டி அருகே டம்டம் பாறை என்னுமிடத்தில் நேற்று முன்தினம் மாலை ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், வனத்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமாகி விட்டதால், வாகனங்கள் சென்று வரும் வகையில் மட்டுமே சீரமைக்கப்பட்டது.
இந்தநிலையில் 2-வது நாளாக நேற்று மலைப்பாதையில் ராட்சத மரத்தை அகற்றும் பணி நடந்தது. அதன்படி பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, ராட்சத மரம் அகற்றப்பட்டது.
மேலும் சரிந்து விழுந்த பாறைகள், மண் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டன. இதனையடுத்து கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து சீரானது.
Related Tags :
Next Story