கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை


கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 22 Sept 2021 10:37 PM IST (Updated: 22 Sept 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

வில்லியனூர், செப்.
வில்லியனூரை அடுத்த காட்டேரிக்குப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் பிள்ளையார்குப்பம் பகுதியில் கைவினை பொருட்கள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சத்தியவாணி (வயது 38) என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். சக்திவேல் தான் செய்யும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக வெளியூர் செல்வது வழக்கம். தொழில் நிமித்தமாக அவருக்கு செல்போனில் அடிக்கடி அழைப்பு வருமாம். இதனால் சக்திவேல், வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக சத்தியவாணி கருதினார். இதன் காரணமாக  கணவன்& மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சத்தியவாணி, வீட்டில் உள்ள ஒரு அறையில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் தீக்காயம் அடைந்து அவர் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு சக்திவேல் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, சத்தியவாணி உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். உடனே உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு சத்தியவாணி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story