கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது


கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 22 Sept 2021 10:59 PM IST (Updated: 22 Sept 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது

காட்பாடி

விருதம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி. இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அருகிலுள்ள பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆடன்ஸ் (வயது 42) என்பவர் மொட்டை மாடியில் இருந்து மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து உள்ளார். இதைப்பார்த்து மாணவி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் ஆட்டோ டிரைவர் மாடியில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். 
இந்த நிலையில் நேற்று காலை ஆடன்ஸ் தனது வீட்டுக்கு வந்தார். உடனடியாக   பொதுமக்கள் அவரை வீட்டில் வைத்து கதவை பூட்டிவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சிலர் அங்கிருந்த ஆட்டோவை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. போலீசார் விரைந்து வந்து ஆடன்சை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் விருதம்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story