கஞ்சா வைத்திருந்த மின் வாரிய ஊழியர் கைது


கஞ்சா வைத்திருந்த மின் வாரிய ஊழியர் கைது
x
தினத்தந்தி 22 Sept 2021 11:03 PM IST (Updated: 22 Sept 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா வைத்திருந்த மின் வாரிய ஊழியர் கைது

குடியாத்தம்

குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்&இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போலீசார் ஜலாலுதீன், அத்திக் உள்ளிட்டோர் நேற்று காலையில் குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூர் கூட்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது. அந்த மோட்டார் சைக்கிளில் 250 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை விசாரணை செய்தபோது மேல்ஆலத்தூர் அடுத்த கொண்ணையாத்தம் பகுதியை சேர்ந்த யுவராஜ் (வயது 29) என்பதும், அவர் வடகாத்திப்பட்டி மின்வாரியத்தில் ஊழியராக வேலை செய்வதும் தெரியவந்தது.

இதனையடுத்து குடியாத்தம் டவுன் போலீசார் மின்வாரிய ஊழியர் யுவராஜை கைது செய்து அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா வழக்கில் மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story