ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,648 பதவிகளுக்கு 7,660 பேர் மனுதாக்கல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,648 பதவிகளுக்கு 7,660 பேர் மனுதாக்கல்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. இறுதி நாளான நேற்று அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் குவிந்தனர். இதனால் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் அனைத்தும் பரபரப்புடன் காணப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாவட்டத்தில் மொத்தம் உள்ள 13 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு 95 பேரும், 127 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 684 பேரும், 2,220 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5,634 பேரும், 288 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 147 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் உள்ள 2,648 பதவிகளுக்கு 7,660 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story