கார் மோதி கல்லூரி மாணவி பலி


கார் மோதி கல்லூரி மாணவி பலி
x
தினத்தந்தி 22 Sept 2021 11:39 PM IST (Updated: 22 Sept 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

கார் மோதி கல்லூரி மாணவி பலியானார்.

இளையான்குடி, 
 இளையான்குடி அருகே உள்ள பகைவரை வென்றான் கிராமத்தைச் சேர்ந்த வாசு தேவன் என்பவரின் மகள் வாணி (வயது 21). திருப்புவனம் அருகே உள்ள கருவக்குடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரது மகள் பவித்ரா (22). இவர்கள் பூவந்தி கல்லூரியில் படித்து வந்துள்ளனர்.  வாணியின் மாற்றுச்சான்றிதழை வாங்கிவிட்டு 2 பேரும் ஊருக்கு திரும்பும்போது அந்த வழியாக வந்த கார்மோதியது. இதில் வாணி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பவித்ரா படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இளையான்குடி சப்&இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளையார்கோவிலை சேர்ந்த வினோத்குமார், அருண்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.  காரை பறிமுதல் செய்தனர். பவித்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார். விபத்தில் இறந்த வாணியின் தாய் இளையான்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். 

Next Story