ஜோலார்பேட்டையில் ரெயில் பயணிகளிடம் நகைதிருடிய கஞ்சா வியாபாரி கைது
ஜோலார்பேட்டையில் ரெயில் பயணிகளிடம் நகை திருடிய கஞ்சா வியாபாரி கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 11 பவுன் நகை, 7 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையில் ரெயில் பயணிகளிடம் நகை திருடிய கஞ்சா வியாபாரி கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 11 பவுன் நகை, 7 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
நகை திருட்டு
கர்நாடக மாநில ஸ்ரீராம்புரம் பகுதியை சேர்ந்த மதன் குமார் மனைவி சிந்துஜா. இவர் கடந்த 6&ந் தேதி சென்னையில் இருந்து மைசூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றபோது அவர் அணிந்திருந்த 5Ñ பவுன் தாலிச்செயினை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இது குறித்து ஜோலார்பேட்டை போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதேபோன்று திருவனந்தபுரம் ரெயில், சேரன் எக்ஸ்பிரஸ், காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் செல்போன் திருட்டு மற்றும் தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ உத்தரவின்பேரில், சேலம் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
கேரளாவை சேர்ந்தவர் கைது
இந்தநிலையில் நேற்று காலை ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்த திருவனந்தபுரம் ரெயிலை போலீசார் கண்காணித்தபோது, போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பிஓட முயற்சித்தார். அவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் கோழிக்கோடு வடக்கரை பகுதியை சேர்ந்த அனிஷ்பாபு (வயது 40) என்பது தெரியவந்தது.
அவர் வைத்திருந்த பையை பரிசோதனை செய்து பார்த்ததில் தங்க நகைகளை உருக்கிய நிலையில் 11 பவுன் மற்றும் 7 செல்போன் இருந்தது. அது திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது .
அதைத்தொடர்ந்து அவரை கைது செய்து, 11 பவுன் நகை, 7 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இவர் மீது ஈரோடு, சேலம் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி அதனை கேரள மாநிலத்திற்கு கடத்திசென்று விற்பனை செய்துயுள்ளார் இதனால் இவர் கேரளா மாநில போலீசாரால்கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ளார்.
Related Tags :
Next Story