மனுதாக்கல் செய்வதில் குளறுபடி, தி.மு.க., அ.தி.மு.க.வினர் போராட்டம்


மனுதாக்கல் செய்வதில் குளறுபடி, தி.மு.க., அ.தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 22 Sept 2021 11:57 PM IST (Updated: 22 Sept 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு தாக்கலில் ஏற்பட்ட குளறுபடியால் தி.மு.க., அ.தி.மு.க.வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணியம்பாடி

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு தாக்கலில் ஏற்பட்ட குளறுபடியால் தி.மு.க., அ.தி.மு.க.வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேட்புமனு தாக்கல்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியதிற்கு உட்பட்ட கொத்தகோட்டை ஊராட்சி, செக்குமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய 7&வது வார்டில் மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்தார். ஆனால் அவர் மனுதாக்கல் செய்யவரவில்லை. அவருக்கு பதில் மனுவை முன்மொழியும் நபர், ஜெய்சங்கரின் மனுவை தாக்கல் செய்ய வந்தார்.

தேர்தல் அதிகாரி மனு வில் உள்ளகுறைகளை நிவர்த்தி செய்துதருமாறு கூறியுள்ளார். மனுவை சரிசெய்து மாலை 5.5 மணிக்கு தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளார். இதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் 4.40 மணிக்கே அலுவலக வளாகத்திற்குள் வந்ததாகவும், அதனால் மனுவை வாங்க வேண்டும் என்று அதிகாரியிடம் அ:தி.மு.க.வினர் வலியுறுத்தினர்.

தி.மு.க., அ.தி.மு.க. போராட்டம் 

இதனால் தி.மு.க.வினருக்கும், அ.தி.மு.கவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர் பிச்சாண்டியை மாற்ற வலியுறுத்தி அலுவலக வளாகத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி தலைமையில் தி.மு.க.வினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் அ.தி.மு.க.வினர் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் துணை போலீஸ்சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் பிச்சாண்டி ஆகியோர், எம்.எல்.ஏ.க்கள் வாணியம்பாடி செந்தில்குமார், ஜோலார்பேட்டை தேவராஜ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் காலதாமதமாக வந்த மனுவை அதிகாரிகளிடம் கொடுத்ததாக கூறிய பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story