அரை ஆடை அணிந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்த விவசாயிகள்


அரை ஆடை அணிந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்த விவசாயிகள்
x
தினத்தந்தி 23 Sept 2021 12:01 AM IST (Updated: 23 Sept 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் அரை ஆடை அணிந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்த விவசாயிகள் 100 ஆண்டுகள் கடந்தும் விவசாயிகள் நிலை மாறவில்லை என வேதனையுடன் கூறினர்.

மயிலாடுதுறை;
மயிலாடுதுறையில் அரை ஆடை அணிந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்த விவசாயிகள் 100 ஆண்டுகள் கடந்தும் விவசாயிகள் நிலை மாறவில்லை என வேதனையுடன் கூறினர். 
மகாத்மா காந்தி
1921ம் ஆண்டு செப்டம்பர் 22ந் தேதி மதுரைக்கு வந்த மகாத்மாகாந்தி விவசாயிகள் அரை ஆடை அணிந்து இருப்பதை பார்த்து வேதனை அடைந்து இந்தியாவின் கடைசி விவசாயி எப்போது முழுமையான ஆடை அணியும் நிலை ஏற்படுகிறதோ அதுவரை தானும் முழு ஆடை அணிய போவதில்லை என்று அரை ஆடைக்கு மாறினார். பின்னர் அதுவே அவரது அடையாளமாக மாறியது. இந்த நிகழ்வு நடந்து நேற்றுடன் 100 ஆண்டுகள் முடிவடைந்தது. இந்தநிலையில் மயிலாடுதுறையில் நேற்று 100 ஆண்டுகள் கடந்தும் விவசாயிகள் தங்கள் நிலை தற்போதும் மாறவில்லை என கூறி அரை ஆடை அணிந்து வந்து மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 
கோஷம் எழுப்பினர்
போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கி காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து விவசாயிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கம் கோபிகணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story