தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி
அருப்புக்கோட்டையில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி மழை வெள்ளம், கட்டிட இடர்பாடுகள் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக தப்பிப்பது குறித்தும், பேரிடரில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை எப்படி மீட்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர். மேலும் மழை காலங்களில் வீடுகளில் பாம்புகள் நுழைந்தால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், 24 மணிநேரமும் தீயணைப்புத் துறை வீரர்கள் தயார் நிலையில் இருப்பார்கள் எனவும் கூறினர். இதில் தீயணைப்புதுறை வீரர்கள், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story