மயங்கி கிடந்த டெய்லர் சாவு


மயங்கி கிடந்த டெய்லர் சாவு
x
தினத்தந்தி 23 Sept 2021 12:53 AM IST (Updated: 23 Sept 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் மயங்கி கிடந்த டெய்லர் பரிதாபமாக இறந்தார்.

விருதுநகர், 
விருதுநகர் பழைய சிவகாசி ரோட்டில் உள்ள முத்துராமலிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் அன்னபூரணி என்ற அருணா (வயது 44). இவர் தனியார் பள்ளியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்துவருகிறார். இவரது கணவர் ஆதிகுமரன் (51). டெய்லராக வேலை பார்த்து வந்தார். ஆதிகுமரன் குடிப்பழக்கத்துக்கு அடிமையான நிலையில் குடும்பத்தினரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு இந்நகர் தெப்பம் அருகே மயங்கிய நிலையில் கிடந்த இவரை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில்சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று ஆதிகுமரன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அன்னபூரணி கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story