தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 23 Sept 2021 12:57 AM IST (Updated: 23 Sept 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

சாலை சீரமைக்கப்படுமா?
குழிக்கோட்டில் இருந்து வெள்ளிகோடு செல்லும் சாலை கடந்த பல மாதங்களாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் அவதி படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                         -டிஷோன் தாமஸ், குழிக்கோடு.
ஓடையில் அடைப்பு 
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 38-வது வார்டு இருளப்பபுரம் அருந்ததியர் காலனியில் கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாக்கடை நீர் வீடுகளின் முன்பு தேங்கி நிற்கிறது. அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதை சரி செய்ய சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                                -கண்ணன், இருளப்பபுரம்.
ஜல்லிகள் பெயர்ந்த சாலை
விளாத்துறை பஞ்சாயத்துக்குட்பட்ட 5-வது வார்டு, பேப்பிலாவிளையில் இருந்து ஆலுவிளை செல்லும் சாலை சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                              -வினிதா, ஆலுவிளை.
மின் கம்பத்தை மாற்ற வேண்டும் 
மாத்தூர் தொட்டிப்பாலம் அருகில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துமிடம் பகுதியில் ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மருடன் இணைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில் ஒன்று சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் டிரான்ஸ்பார்மருடன் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                 -தினேஷ், மாத்தூர்.
பாதை வசதி வேண்டும்
வேர்க்கிளம்பி பேரூராட்சிக்கு உட்பட்ட காரியமங்கலத்துவிளை ஊரில் குளத்தையொட்டி உள்ள பாதை அகலம் இல்லாமல் உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை. எனவே, குளத்தையொட்டி பாலம் கட்டி, பாதை வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
                                                                       -அகிலா, வேர்க்கிளம்பி.
சாலையில் வடிந்தோடும் குடிநீர்
புதுக்கடை-பரசேரி சாலையில் கருக்குப்பனை சந்திப்பில் சுனாமி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையின் நடுவே குடிநீர் வடிந்தோடுகிறது. இதனால், சாலை சேதமடைவதுடன், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பை சரி செய்து சாலையோரத்தில் வடிகால் ஓடையும் அமைக்க வேண்டும். 
                                                                            -எட்வின், மத்திகோடு.

தெரு விளக்குகள் மாற்றப்படுமா? 
கல்லுக்கூட்டம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வலிய மார்த்தாண்டன்விளை பகுதியில் உள்ள 9 மற்றும் 10 ஆகிய மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் பழுதடைந்து பல மாதங்களாக எரியாமல் உள்ளன. இதனால், இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, பழுதடைந்த மின் விளக்குகளை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?                                                                                                                                        -சுஜயகுமார், வலியமார்த்தாண்டன்விளை


Next Story